குறள்பலூன்திருக்குறளின் தனித்துவம்

உலக மொழிகளில் எல்லாம் மிகவும் தொன்மையானதும் ,செம்மொழி என்று பெயர் பெற்றதுமான நம் தாய்மொழி தமிழை ,நம் தலைமுறையோடு முடிந்து விடாமல் அடுத்த தலைமுறைகளுக்கும் தொடர வேண்டும் என்ற எண்ணம் ,ஆசை, தமிழனாக பிறந்த,தமிழை நேசிக்கின்ற ஒவ்வொரிடமும் இருக்கின்றது.

பல நாடுகளில் வசிக்கும் நம் தமிழர்கள் ,அங்கங்கே தமிழ் சங்கங்கள் நிறுவி ,இன்றைய இளம் தலைமுறையினர்க்கு நமது சங்க கால இலக்கியங்களை எல்லாம் அறிமுகம் செய்து, அவர்களுக்கு தமிழ் மேல் உள்ள ஆர்வத்தை மேம்படுத்திக் கொண்டு இருக்கின்றனர் . அதிலும் குறிப்பாக வாழ்வியலை கற்று தருகின்ற, தெய்வப்புலவர் திருவள்ளுவரின் , திருக்குறள்மீது நம் தமிழ் மக்களுக்கு அலாதி பிரியம். கிட்டத்தட்ட 2000 வருடங்களுக்கு முன் ,கடவுள்,இனம் என்று எதையும் கருத்தில் கொள்ளமாமல் ,வாழ்க்கைக்கு தேவையான அறம் ,பொருள் ,இன்பம் இந்த மூன்றை மட்டுமே அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட, ஒரு உன்னத நூலின் மீது, நம் தமிழ் மக்களுக்கு தீராத ஈடுபாடு .. அதனால் தான் திருக்குறளை ,பள்ளிகளிலும் ,சுவர் விளம்பரங்களிலும் ,பேருந்துகளிலும் ,மேடை பேச்சுகளிலும்,திரும்பிய பக்கமெல்லாம் திருக்குறள் என்னும் அளவிற்கு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது திருக்குறளை மக்களிடம் சென்று சேர்க்க பல பேர், பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர்.சில பேர் சாதனை முயற்சியாகவும் சிலவற்றை செய்து வருகின்றனர் . உதாரணத்திற்கு 1330 குறள்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது ,கிட்டத்தட்ட 450 அடி பதாகையில் குறள்களை எழுதுவது, முற்றிலும் நவ தானியங்களால் வள்ளுவர் உருவத்தை வரைவது, கன்னியாகுமரியில் 133 அடி உயர சிலை அமைத்தது..இன்னும் சொல்ல போனால் புகழ் பெற்ற தமிழ் இசை அமைப்பாளர் பரத்வாஜ் போன்றவர்கள், கிட்டத்தட்ட 3 வருடங்கள் உழைத்து, 380 குறள்களுக்கு இசை அமைத்தது ..இது மாதிரி அவரவர் துறைகளில் ,தங்களால் முடிந்த முயற்சிகள் செய்து திருக்குறளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றனர் .குறள்பலூன்

அந்த வரிசையில் .. சுமார் எட்டு வருடங்களாக வெப்ப காற்று பலூனில் அனுபவமும் பல நாடுகளின் பலூன் திருவிழாக்களில் பங்கு பெற்றதுமான எங்களுடைய குளோபல் மீடியா பாக்ஸ் நிறுவனம் ஒரு உலக சாதனை முயற்சியாக " பிரம்மாண்ட திருக்குறள் பலூன் " ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது ..

100 அடி உயரமும் ,1330 குறள்களையும் அதன் ஆங்கில விளக்கத்தோடு உள்ளடக்கிய , உலகின் முதல் திருக்குறள் பலூன் ஆக இது அமைய இருக்கின்றது . வெறும் ஏட்டில் இருந்து தொடங்கி கல்வெட்டு ,காகிதம் ,கணிப்பொறி என பலமுறைகளில் திருக்குறளை பார்த்து வந்த நமக்கு, ஒரு பிரமாண்ட பலூன் ,அதுவும் முற்றிலும் குறள்களால் அமையபட்டது என்றால் ,நம் தமிழ் மக்கள் மட்டுமல்லாமல் ,உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் ,நம் திருக்குறள் மிகவும் எளிதாக சென்று சேரும் என்று நம்புகிறோம் ..பலூன் வரலாறு

பலூன் என்றால் சிறு வயதில் இருந்தே அனைவருக்கும் குதூகூலம் தான் .அதுவும் பல வண்ணங்களில் ,பல வடிவங்களில் இருக்கும் ,மிகப் பெரிய வெப்ப காற்று பலூனில் பயணம் செய்வது என்றால் ,அந்த சந்தோசத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்றே சொல்லலாம் .

முதன்முதலில் வெப்பக் காற்று பலூனை உருவாக்கி பறக்கவிட்ட பெருமை, மான்ட்கால்ஃபியர் சகோதரர்களான ஜோசப் மிஷல், ஷாக்-ஏட்யென் ஆகியோரையே சேரும்.இவர்கள் பிரான்சிலுள்ள அனானேயைச் சேர்ந்த பணக்கார பேப்பர் உற்பத்தியாளர் ஒருவரின் மகன்களாவர். 1780-களின் ஆரம்ப ஆண்டுகளில் அவர்கள் செய்த முதற்கட்ட பரிசோதனைகளில் பேப்பர் பலூன்களை உபயோகித்தனர். பிறகு, மக்களை சுமந்து செல்லும் பலூனை பறக்கவிட வேண்டும் என முடிவு செய்தனர். ஆனாலும் முதலில், ஒரு செம்மறியாடு, சேவல், வாத்து,ஆகியவற்றை சுமந்துகொண்டு செப்டம்பர் 1783-ல் பிரான்சிலுள்ள வெர்சைல்ஸில் அந்த பலூன் , எட்டு நிமிடம் பறந்த பிறகும் அவை மூன்றிற்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. ஆகவே, நவம்பர் 21, 1783-ல் மனிதர்களை சுமந்துகொண்டு பறக்கும் பலூன் முதன்முறையாக முயன்று பார்க்கப்பட்டது.பறக்கும் அனுபவம்

பலூனின் திறப்பிற்கு நேர் கீழே உறுதியான, பிரம்பு கூடை ஒன்று கேபிள்களால் பலூனோடு இணைக்கப்பட்டிருக்கும். ஒரு விமானியும் அதில் பயணிப்பவர்களும் அந்தக் கூடையில்தான் இருப்பர். அந்தக் கூடைக்கு மேலே , எரியூட்டும் சாதனமும் ரெகுலேட்டரும்இருக்கின்றது எரிபொருள் நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் கூடைக்கு உள்ளே இருக்கும்.

நீண்ட ரன்வே இருந்தால்தான் ஒரு விமானத்தால் மேலெழும்ப முடியும். ஆனால், திறந்தவெளியில் ஒரு சிறிய துண்டு நிலம் இருந்தாலே போதும் இந்த வெப்பக் காற்று பலூன் அழகாக மேலெழும்பிவிடும். மேலே எழும்புவதற்கு எந்த தடையும் இல்லாத ஓரிடத்தை கண்டுபிடிப்பதே மிகவும் முக்கியமானது.. “செல்லும் திசையையும் வேகத்தையும் காற்று கட்டுப்படுத்துவதால் ஒவ்வொரு முறை பறப்பதும் வித்தியாசமான அனுபவமே”என்பதே பலூன் சவாரியில் பயணம் செய்தவர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது .திருக்குறள் பலூனின் கரு உருவாகிய விதம்

2003 ஆம் ஆண்டு UTV என்ற மிகப்பெரிய நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது A .R .செல்வ சரவணா மற்றும் பெனெடிக்ட் சாவியோ இருவருக்கும் இடையில் நல்ல நட்பு ஏற்பட்டது .கிட்டத்தட்ட 4 வருடங்கள் ஒன்றாக வேலை செய்த பின்பு செல்வசரவணா அவர்கள் சிங்கப்பூரில் ஊடக துறையில் வேலை செய்ய போக ,பெனெடிக்ட் அவர்கள் வெப்ப காற்று பலூன் துறையில் ஈடுபட ஆரம்பித்தார்.

இருவரும் சந்திக்கும் போதெல்லாம் அல்லது போனில் பேசிக்கொள்ளும் போதெல்லாம் அவர்களின் பேச்சு வெப்ப காற்று பலூன் பற்றியதாகவே இருக்கும் . பெனெடிக்ட் அவர்களுக்கு ,இந்த துறையில் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் ,தென் இந்தியாவில்வெப்ப காற்று பலூன் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்து இருந்து வந்தது. அப்படி ஒரு நாள் இரவு ,சிங்கப்பூரில் உள்ள செல்வசரவணா அவர்களுடன் போனில் பொதுவாக பேசிக்கொண்டிருக்கும் போது அவர்களின் பேச்சு மெல்ல வெப்ப காற்று பலூன் பக்கம் திரும்பியது.பெனெடிக்ட் அவர்கள் தமிழையும் ,தமிழ் மக்களையும் வைத்து ,வெப்ப காற்று பலூனில் ஏதாவது செய்ய வேண்டும் ,திருவள்ளுவர் அந்த மாதிரி என்று சொல்ல போக ,உடனே செல்வசரவணா அவர்கள், ஏன் நாம 1330 திருக்குறளையும் பலூனில் எழுதக்கூடாது ? அந்த நிகழ்வில் பங்கேற்கும் ஒவ்வொருவரின்புகைப்படத்தையும் பலூனில் அச்சிட்டால் என்ன ? என்று தன் யோசனையை சொல்லத் தொடங்க ,திருக்குறள் பலூனின் விதை அந்த இரவில் விதைக்கப்பட்டது ..

ஒரு சங்க இலக்கியத்தை பலூனில் பதிவேற்றலாம் என்ற செல்வசரவணா அவர்களின் யோசனை உலக பலூன் வரலாற்றில் முதன்முறையானது என்று உணர்ந்த பெனெடிக்ட் சாவியோ அவர்கள் ,அதனை பலூனில் எப்படி செயல்படுத்துவது ,அதற்குரிய தொழில்நுட்ப ஆலோசனைகளை பிரபல பலூன் கட்டமைப்பு நிறுவனத்திடம் கலந்து பேசியதில் ,அவர்களால் முடியும் என்று பதில் கிடைத்ததால் உடனே திருக்குறள் பலூன் உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டனர்.

பங்களிப்பாளர்கள்

சமீபத்திய செய்திகள்

Kural Balloon
2015-04-17, 16:02
1 மே 2015 முதல் இணையம் வழி பங்குபெறலாம் .
Kural Balloon
2015-04-17, 16:01
இந்த இளைஞர்கள் எடுத்திருக்கும் அபார முயற்சியை நாம் மனதார ஆதரிப்போம் - பேராசிரியர் சாலமன் பாப்பையா.
Kural Balloon
2015-04-17, 16:01
உலகின் முதல் திருக்குறள் பலூனின் இணையதளம் ஏப்ரல் 14 2015 அன்று தொடங்கப்பட்டது.

Facebook

ஆதரவாளர்கள்

Thiruvalluvar Thamizh valarchi kazhagam
Taiwan Thamizh sangam
Tamil People in UK
Wales Tamil Sangam
Brisbane Tamil Association
Adelaide
SBS Tamil
Guangdong Tamil community

INDIA
+91 94 89 11 22 44

USA
+1-775-9810-240

TAIWAN
+886 975 508 181

UNITED KINGDOM
+44-7441-909288