எங்களைப்பற்றி

உலக மொழிகளில் எல்லாம் மிகவும் தொன்மையானதும், செம்மொழி என்று பெயர் பெற்றதுமான நம் தாய்மொழி தமிழை, நம் தலைமுறையோடு முடிந்து விடாமல் அடுத்த தலைமுறைகளுக்கும் தொடர வேண்டும் என்ற எண்ணம், தமிழனாக பிறந்த தமிழை நேசிக்கின்ற ஒவ்வொரிடமும் இருக்கின்றது. குறிப்பாக வாழ்வியலை கற்று தருகின்ற தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் மீது நம் தமிழ் மக்களுக்கு தீராத ஈடுபாடு. அதனால் தான் பள்ளிகளிலும், சுவர் விளம்பரங்களிலும், பேருந்துகளிலும் மேடை பேச்சுகளிலும், திரும்பிய பக்கமெல்லாம் திருக்குறள் என்னும் அளவிற்கு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது

இதன் அடுத்தகட்டமாக சுமார் எட்டு வருடங்களாக வெப்ப காற்று பலூனில் அனுபவமும், பல நாடுகளின் பலூன் திருவிழாக்களில் பங்கு பெற்றதுமான எங்களுடைய குளோபல் மீடியா பாக்ஸ் நிறுவனம் ஒரு உலக சாதனை முயற்சியாக "பிரம்மாண்ட திருக்குறள் பலூன் " ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது..

100 அடி உயரமும், 1330 குறள்களையும் அதன் ஆங்கில விளக்கத்தோடு உள்ளடக்கிய, உலகின் முதல் திருக்குறள் பலூன் ஆக இது அமைய இருக்கின்றது. வெறும் ஏட்டில் இருந்து தொடங்கி, கல்வெட்டு, காகிதம், கணிப்பொறி என பலமுறைகளில் திருக்குறளை பார்த்து வந்த நமக்கு, ஒரு பிரமாண்ட பலூன், அதுவும் முற்றிலும் குறள்களால் அமையபட்டது என்றால், நம் தமிழ் மக்கள் மட்டுமல்லாமல், உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும், நம் திருக்குறள் மிகவும் எளிதாக சென்று சேரும் என்று நம்புகிறோம்.

பங்களிப்பாளர்கள்

சமீபத்திய செய்திகள்

Kural Balloon
2015-04-17, 16:02
1 மே 2015 முதல் இணையம் வழி பங்குபெறலாம் .
Kural Balloon
2015-04-17, 16:01
இந்த இளைஞர்கள் எடுத்திருக்கும் அபார முயற்சியை நாம் மனதார ஆதரிப்போம் - பேராசிரியர் சாலமன் பாப்பையா.
Kural Balloon
2015-04-17, 16:01
உலகின் முதல் திருக்குறள் பலூனின் இணையதளம் ஏப்ரல் 14 2015 அன்று தொடங்கப்பட்டது.

Facebook

 

ஆதரவாளர்கள்

Thiruvalluvar Thamizh valarchi kazhagam
Taiwan Thamizh sangam
Tamil People in UK
Wales Tamil Sangam
Brisbane Tamil Association
Adelaide
SBS Tamil
Guangdong Tamil community

INDIA
+91 94 89 11 22 44

USA
+1-775-9810-240

TAIWAN
+886 975 508 181

UNITED KINGDOM
+44-7441-909288